தமிழ் சினிமாவில் மீண்டும் மலர்ந்த “ரோஜா”!
சினிமாவில் இருந்து அரசியல் களம் புகுந்த நடிகை ரோஜா, பல வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவுக்குள் மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ளார். 90 களில் கனவு கன்னியாக வலம் வந்த ரோஜாவுக்கென ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல சின்னத்திரையிலும் சாதித்து காட்டியவர் ரோஜா. தற்போது அவர் நடித்துள்ள படத்தின், புதிய “போஸ்டரை” படக்குழு வெளியிட்டுள்ளது. லெனின் பாண்டியன் படத்தை டி. டி. பாலச்சந்திரன் இயக்கியுள்ளார். இப் படத்தில் முக்கியமான திரையுலக நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பாடகர், […]




