ட்ரம்பின் அமைதி வாரியத்தில் இணைய மொராக்கோ பச்சைக்கொடி: பிரான்ஸ் போர்க்கொடி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமைதி வாரியத்தில் இணைவதற்கு வட ஆபிரிக்க நாடானா மொராக்கோ Morocco பச்சைக்கொடி காட்டியுள்ளது. இது தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அழைப்பை மொராக்கோ மன்னர் ஆறாம் முகமது King Mohammed VI ஏற்றுக்கொண்டுள்ளார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் இன்று (20) அறிவித்தார். டிரம்பின் விரிவான அமைதித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தையும், காசா நிர்வாகத்திற்கான தேசியக் குழுவின் அதிகாரப்பூர்வ உருவாக்கத்தையும் வரவேற்கின்றோம் எனவும் அவர் கூறினார். ஐ.நா. சபைக்கு மாற்றீடாகவே […]




