3 ஆம் திகதி முன்னிலையாகுமாறு ஷிரந்திக்கு FCID அறிவுறுத்து!
பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் FCID எதிர்வரும் 03 ஆம் திகதி முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்சவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. ஜனவரி 27 ஆம் திகதி ஷிரந்தி ராஜபக்ச விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். தனிப்பட்ட காரணங்களினால் முன்னிலையாக முடியாது என தனது சட்டத்தரணிகள் ஊடாக அவர் தெரிவித்திருந்தார். அத்துடன் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாவதற்கு, இரு வார கால அவகாசம் கோரி இருந்தார். எனினும், அவரை 3 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் […]




