இலங்கை செய்தி

ட்ரம்புக்கு எதிராக போராட்டம்: கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு!

  • January 5, 2026
  • 0 Comments

வெனிசுலா மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையை கண்டித்து கொழும்பில் இன்று (05) மாலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட மக்கள் போராட்ட இயக்கத்தினரால் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இடதுசாரி அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். வெனிசுலா இறையாண்மைமிக்க சுதந்திர நாடெனவும், அதன்மீதான ஆக்கிரமிப்பு மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி கைது போன்ற நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர். போரை உருவாக்கி, எண்ணைவளத்தை கொள்ளையடிக்க முற்படுகின்றனர் எனவும் […]

அரசியல் இலங்கை செய்தி

அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இன்று போராட்டம்!

  • January 5, 2026
  • 0 Comments

வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையைக் கண்டித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இன்று (05) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முன்னிலை சோசலிசக் கட்சியாலேயே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு போராட்டம் நடத்தப்படும் என சமூகவலைத்தள பிரச்சாரமொன்றில் மேற்படி கட்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். வெனிசுலா விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை நிறுத்துமாறும், இலத்தீன் அமெரிக்காவில் பரந்த தலையீடுகளை நிறுத்துமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜே.வி.பியின் இருந்து பிரிந்து சென்ற குழுவினராலேயே முன்னிலை சோசலிசக் கட்சி […]

இலங்கை செய்தி

“தையிட்டி மண் தமிழர்களின் சொத்து” – விண்ணதிர முழங்கிய கோஷம்: பொலிஸார் குவிப்பு!

  • January 3, 2026
  • 0 Comments

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. தமது காணியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டு காணி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தே காணி உரிமையாளர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சட்டவிரோத கட்டிடங்களை உடனே அகற்று என வலியுறுத்திய போராட்டக்காரர்கள், சட்டவிரோத விகாரைக்கு காவல்துறை காவலா எனவும் கேள்வி எழுப்பினர். தையிட்டி மண் தமிழர்களின் சொந்த மண், அதனை உரிமையாளர்களுக்கு வழங்கு எனவும் கோஷங்களை எழுப்பினர். தையிட்டி விகாரை பகுதியில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பெருமளவு பொலிஸார் […]

அரசியல் இலங்கை செய்தி

போராட்டம் வெடிக்கும்: என்பிபி அரசுக்கு எதிரணி எச்சரிக்கை!

  • January 1, 2026
  • 0 Comments

ஊடகங்கள்மீது கைவைப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால் அதற்கு எதிராக மக்களுடன் இணைந்து வீதயில் இறங்கிப் போராடுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் SJPபொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma Bandara எச்சரித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தோல்வி பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. அதனிடம் தெளிவான வேலைத்திட்டம் இல்லை. இதனை ஊடகங்கள் வெளிப்படுத்தும்போது […]

error: Content is protected !!