அரசியல் இலங்கை செய்தி

அவசரகால சட்டம் நீடிக்கப்படுவது ஏன்? பிரதமர் விளக்கம்!

  • January 6, 2026
  • 0 Comments

அவசரகால சட்டம் முறைகேடாக பயன்படுத்தப்படவில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய Harini Amarasooriya தெரிவித்தார். அவசர காலசட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ பேரிடர் நிலைமையை முகாமை செய்வதற்காகவே அவசர கால சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. மாறாக கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதற்காக அது பயன்படுத்தப்படவில்லை.” எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். உரிய ஆய்வுகளின் பின்னரே மக்களை மீளகுடியமர்த்த வேண்டும். இதற்குரிய பணிகளை அரசாங்க அதிகாரிகள் முன்னெடுப்பதற்காகவும், […]

அரசியல் இலங்கை செய்தி

இன்று கூடுகிறது நாடாளுமன்றம்! முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்வு!!

  • January 6, 2026
  • 0 Comments

நாடாளுமன்றம் இன்று (6) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடுகின்றது. 2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை நடைபெறும். இதன்போது முக்கியத்துவமிக்க பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன. குறிப்பாக அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்துக்கொள்வதற்குரிய விவாதம் நடைபெற்று, வாக்கெடுப்பு நடத்தப்படும். அத்துடன், மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்குரிய நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் யோசனையும் முன்வைக்கப்படவுள்ளது. மேலும் சமகால அரசியல் தொடர்பிலும் […]

அரசியல் இலங்கை செய்தி

நாட்டுக்கு ஆபத்தெனில் ரணில் களத்துக்கு வருவார்: ஐதேக அறிவிப்பு!

  • January 3, 2026
  • 0 Comments

“நாடு விழும்பட்சத்தில் சவாலை ஏற்று அதனை நிர்வகிகக்கூடிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. எனவே, நாட்டுக்கு ஆபத்தெனில் அவர் பொறுப்பைவிட்டு ஓடும் நபர் கிடையாது.” இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார். புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து, எதிரணி அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துகூறி ஆசிபெற்றனர். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சமன் ரத்ன பிரிய கூறியவை வருமாறு, “தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் முறையான முகாமைத்துவம் இல்லை எனவும், இவ்வாறு […]

அரசியல் இலங்கை செய்தி

2026 ஆம் ஆண்டுக்குரிய அரசியல் சமர் 5 ஆம் திகதி ஆரம்பம்!

  • January 2, 2026
  • 0 Comments

பிரதான அரசியல் கட்சிகள் 2026 ஆம் அண்டுக்கான தமது முதலாவது விசேட கூட்டங்களை எதிர்வரும் 05 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்றம் 6 ஆம் திகதி கூடும் நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழு கூட்டம் 5 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டமும் 5 அல்லது 6 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. இது […]

அரசியல் இலங்கை செய்தி

6 ஆம் திகதி கூடுகிறது அதிஉயர் சபை: அவசரகால சட்டம், தெரிவுக்குழு பற்றி ஆராய்வு!

  • January 1, 2026
  • 0 Comments

புத்தாண்டில் முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள சபை அமர்வுகளின்போது முக்கியத்துவமிக்க பல விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளன. அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நாடாளுமன்ற அமர்வில் இது தொடர்பில் விவாதிக்கப்பட்டு, அங்கீரிக்கப்படவுள்ளது. அத்துடன், மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின்கீழ் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்ககோரும் பிரேரணை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. […]

அரசியல் இலங்கை செய்தி

நாடாளுமன்றம் வருமாறு ரணிலுக்கு மீண்டும் அழைப்பு!

  • December 30, 2025
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe மீண்டும் நாடாளுமன்றம் வரவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா Dilan Perera அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாட்டில் தற்போது நெருக்கடியானநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றம் வருகைதந்து, அவரின் அனுபவத்தை நாட்டுக்காக வழங்குவது நல்லது. அந்த வகையில் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வருவது நாட்டுக்கு நல்லது என்பதே எனது கருத்தாகும். அதேபோல அனைத்து […]

அரசியல் இலங்கை செய்தி

மீண்டும் நாடாளுமன்றம் வருவாரா ரணில்? அவரின் திட்டம் என்ன?

  • December 27, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) மீண்டும் நாடாளுமன்றம் வரமாட்டார் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்கவின் நெருக்கத்துக்குரிய அரசியல் சகாக்களில் ஒருவராக ராஜித சேனாரத்ன விளங்குகின்றார். சஜித் தரப்புடன் பயணித்த அவர் தற்போது மீண்டும் ரணில் பக்கம் தாவியுள்ளார். இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வரவுள்ளார் என வெளியாகும் தகவல் தொடர்பில் அவரிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த ராஜித சேனாரத்ன கூறியவை வருமாறு, “ நாடாளுமன்றம் […]

அரசியல் இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டம்: புதிய ஏற்பாட்டுக்கு முன்னாள் நீதி அமைச்சர் போர்க்கொடி!

  • December 26, 2025
  • 0 Comments

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தை நாடுவேன்.” என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapaksa) தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு (Prevention of Terrorism Act) பதிலீடாகவே மேற்படி சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பது தொடர்பான உத்தேச சட்டவரைவு முன்மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் பெப்ரவரி 28 ஆம் திகதிவரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே முன்னாள் நீதி அமைச்சர் (former Justice Minister) விஜயதாச […]

அரசியல் இலங்கை

வடக்கில் இருந்து ராணுவம் எப்போது வெளியேறும்?

  • November 12, 2025
  • 0 Comments

“ வடக்கு, கிழக்கில் போதைப்பொருளுக்கு இராணுவம்தான் பிரதான காரணம். எனவே, அங்கிருந்து இராணுவம் எப்போது வெளியேற்றப்படும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அமைச்சர் சந்திரசேகரிடம் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் சந்திர சேகர், வடக்கு, கிழக்கின் கல்வி நிலை மற்றும் போதைப்பொருள் மாபியா பற்றி கருத்துகளை வெளியிட்டார். இதன்போது எழுந்த கஜேந்திரகுமார் எம்.பி., “ […]

அரசியல் இலங்கை

ஊழல் வாதிகள் தப்ப முடியாது: ஜனாதிபதி திட்டவட்டம்!

  • November 7, 2025
  • 0 Comments

அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து ஹிட்லரை தோற்கடித்ததுபோல, எதிரணிகள் ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சர்வாதிகார பயணத்துக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டுமென எதிரணிகள் விடுத்த அறைகூவலுக்கு பாதீட்டு உரையில் பதிலடி கொடுத்தார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலடி கொடுத்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் […]

error: Content is protected !!