நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாள் நிர்ணயம்!
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு Dr. Harini Amarasooriya எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. அமைச்சரவைப் பேச்சாளரும், ஆளுங்கட்சி பிரதம கொறடாவுமான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa நேற்று மேற்படி தகவலை வெளியிட்டார். “ பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி விரைவில் முன்வைக்கும் என நம்புகின்றோம். அது தொடர்பில் இரு நாட்கள் விவாதிப்பதற்கு நாம் தயார். தேவையேற்படின் மேலும் மூன்று […]












