அரசியல் இலங்கை செய்தி

அமைச்சரவை மாற்றத்துக்கு தயாராகும் அநுர அரசு?

  • January 14, 2026
  • 0 Comments

அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது என வெளியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். “ கல்வி அமைச்சு பதவியில் மாற்றம் வராது. பிரதமர் பதவியிலும் ஹரிணியே தொடர்வார். அமைச்சரவை மறுசீரமைப்பு கதையெல்லாம் கட்டுக்கதை ஆகும்.” – எனவும் அவர் கூறினார். […]

அரசியல் இலங்கை செய்தி

புத்தாண்டு பிறந்த கையோடு மாகாணசபைத் தேர்தலை கோருகிறது மொட்டு கட்சி!

  • January 1, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (01) விசேட ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே கட்சி செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam மேற்கண்டவாறு வலியுறுத்தினார். “நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதியின் பிரகாரம் மாகாணசபைத் தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும், தேர்தலை நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அஞ்சுகின்றது […]

அரசியல் இலங்கை செய்தி

தீய சக்திகளுக்கு அமைச்சர் லால்காந்த எச்சரிக்கை!

  • December 31, 2025
  • 0 Comments

“மக்கள் சக்திக்கு முன்னால் வேறு எந்த சக்தியும் தாக்கு பிடித்து நிற்க முடியாது. எனவே, மக்கள் ஆணைக்கு புறம்பாக செயல்பட்டால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” இவ்வாறு அமைச்சர் லால்காந்த K. D. Lalkantha எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஆட்சி அதிகாரத்தை இழந்து தவிக்கும் தரப்பானது தேசிய மக்கள் சக்தியின் ஜனநாயக வழியிலான பயணம் தொடர்பில் கவலையடைந்துள்ளது. எனவே, எமது பயணத்தை குழப்புவதற்கு அத்தரப்பினர் முயற்சிக்கின்றனர். இந்த சதி […]

error: Content is protected !!