இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ சீனா துணை நிற்கும்!

  • January 12, 2026
  • 0 Comments

கொழும்பு வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi , இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு நடத்தியுள்ளார். இலங்கை நேரப்படி இன்று காலை நாட்டுக்கு வந்த சீன வெளிவிவகார அமைச்சருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. சீன தூதுரக அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர். இரு தரப்பு பேச்சுவார்த்தையின்போது, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சீனா வழங்கிய ஒத்துழைப்புக்கு அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath நன்றி தெரிவித்தார். அத்துடன், இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்குரிய திட்டங்கள் பற்றியும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர் […]

இலங்கை செய்தி

சீன வெளிவிவகார அமைச்சரின் கொழும்பு பயணம் குறித்து டெல்லி கழுகுப்பார்வை!

  • January 11, 2026
  • 0 Comments

சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது விஜயம் தொடர்பில் டெல்லி கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளது. ஆபிரிக்க நாடுகளுக்கான தனது பயணத்தை முடித்துக் கொண்டு சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி Wang Yi இன்று மாலை அல்லது நாளை இலங்கை வருகின்றார். கொழும்பு வரும், சீன வெளிவிவகார அமைச்சர் , இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட தரப்பினருடன் சந்திப்பு நடத்துவார். இலங்கையில் சீனத் திட்டங்களை விரைவுபடுத்துவது மற்றும் புதிய […]

அரசியல் இலங்கை செய்தி

11 ஆம் திகதி இலங்கை வருகிறார் சீன வெளிவிவகார அமைச்சர்: உறுதிப்படுத்தியது அரசு!

  • January 9, 2026
  • 0 Comments

சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi எதிர்வரும் 11 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார் என்பதை இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath உறுதிப்படுத்தியுள்ளார். எதிர்வரும் 12 ஆம் திகதி சீன வெளிவிவகார அமைச்சர் தன்னை சந்தித்து பேச்சு நடத்துவார் எனவும் அவர் கூறினார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார். சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி எதிர்வரும் 13 ஆம் திகதியே இலங்கை வருவார் என முன்னதாக […]

உலகம் செய்தி

சீனாவின் பாரிய போர் பயிற்சி குறித்து ஆஸ்திரேலியா, ஜப்பான் அதிருப்தி!

  • January 1, 2026
  • 0 Comments

தாய்வானை Taiwan சுற்றியுள்ள பகுதியில் சீனா China பாரிய போர் பயிற்சியில் ஈடுபடுவது தொடர்பில் ஆஸ்திரேலியா Australia கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் மேற்படி நடவடிக்கையானது பிராந்திய பதற்றத்துக்கு வழிவகுக்கும் என ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, தாய்வான் மற்றும் சீன விவகாரமானது இராஜதந்திர முயற்சிமூலம் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சீன கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறு தீவே தாய்வானாகும். எனினும், தாய்வான் தமது நாட்டில் ஒரு பகுதியென சீனா வாதிட்டுவருகின்றது. […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கைக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவும் நேசக்கரம்!

  • December 30, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவும் Communist Party of China (CPC) நிவாரணம் வழங்கவுள்ளது. இதற்கமைய சீன நாணய மதிப்பில் ஒரு மில்லியன் பெறுமதியான RMB 1 million நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. இலங்கைக்கான சீன தூதுரகத்தின் எக்ஸ் தள பக்கத்தில் மேற்படி தகவல் இன்று (30) வெளியிடப்பட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர் அண்மையில் இலங்கை வந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜே.வி.பிக்கும், சீன கம்யூனிஸ் […]

error: Content is protected !!