இலங்கை மீண்டெழ சீனாவின் உதவியும் தொடர்கிறது!
பேரிடரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீதிகள், பாலங்கள், தொடருந்து உள்ளிட்ட, உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சீனா உதவும் என நம்பப்படுகின்றது. வெளிநாட்டு நாடுகளுடனான சீன மக்கள்நட்புறவு சங்கத்தின் தலைவர் யாங் வான்மிங் தலைமையிலான பிரதிநிதிகள் குழு, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை கொழும்பில் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியது. இதன்போது, பொருளாதார மற்றும் கலாச்சாரத் துறைகளில் தொடர்ந்து ஆதரவளிப்பதாக யாங் வான்மிங் உறுதியளித்தார். இலங்கை உடனான சீனாவின் நீண்டகால நட்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், அண்மைய பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட […]




