இலங்கையில் குடிபோதையில் வந்த கணவனின் வெறிச்செயல்! பெண் படுகொலை!
இலங்கை – வெல்லம்பிட்டிய பகுதியில் பெண்ணொருவர் இன்று தீவைத்து எரியூட்டப்பட்டுள்ளார். இது தொடர்பில் பெண்ணின் கணவர் தேடப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 29 வயதுடைய ஒரு குழந்தையின் தாயார் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடிபோதையில் வீட்டிற்கு வந்த கணவர் கூரையின் வழியே வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் பெட்ரோலை அப்பெண்ணின் தலையில் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது குழந்தையுடன் அங்கிருந்து தப்பிச் சென்ற கணவர், குழந்தையை அருகில் இருந்த […]