உக்ரைன், ரஷ்யா போர் முடிவுக்கு வரும் சாத்தியம்: ட்ரம்ப் கூறுவது என்ன?
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய முயற்சியில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். உக்ரைன் ஜனாதிபதி, பிரான்ஸ் ஜனாதிபதி மற்றும் நேட்டோ தலைவர்களுடன் இது தொடர்பில் தான் விரிவான கலந்துரையாடலிலட் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார். ஐரோப்பிய தலைவர்களிடமிருந்து எமக்கு பேராதரவு கிடைக்கின்றது. அவர்களை போரை முடிவுக்கு கொண்டுவர விரும்புகின்றனர் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டார். மேற்குலக நாடுகள் தமக்குரிய பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கும் பட்சத்தில் நேட்டோ அமைப்பில் இணையும் திட்டத்தை […]





