மீட்பு பணிக்காக அமெரிக்க படையினரும் களத்தில்!
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பல நாடுகளும் நேசக்கரம் நீட்டிவரும் நிலையில், மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த 60 மீட்புப் படையினர் கொழும்பு வந்துள்ளனர். அமெரிக்க விமானப்படையின் இரண்டு சி-130 ஹெல்குலெஸ் விமானங்களில் உதவிப் பொருட்கள் சகிதம் இவர்கள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். நாடு டுமுவதிலும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதற்கும் விநியோகிப்பதற்கும் அமெரிக்க படையினர் இலங்கை விமானப்படையுடன் இணைந்து பணியாற்றவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை […]




