உகாண்டாவில் (Uganda) இரு பேருந்துகள் மோதி கோர விபத்து – 63 பேர் பலி!
உகாண்டாவில் (Uganda) உள்ள ஒரு நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் மோதியதில் குறைந்தது 63 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகரான கம்பாலாவிற்கும் (Kampala) வடக்கு நகரமான குலுவிற்கும் (Kullu) இடையிலான நெடுஞ்சாலையில் இரவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மோதலைத் தவிர்க்க முயன்றபோது ஒரு பேருந்து மற்றொரு பேருந்துடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் இருந்த பல பயணிகள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.




