போர் சூழல் – உணவுக் கிடங்குகளை நிரப்பும் ஸ்வீடன் (Sweden)!
ஸ்வீடன் (Sweden) தனது பனிப்போர் கால உணவுக் கிடங்குகளை மீளவும் நிரப்பும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யாவுடனான போர் மூளும் அபாயம் அதிகரித்து வருகின்ற நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு சுவீடன் நேட்டோ இராணுவ கூட்டணியில் இணைந்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு திட்டங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக 2026 வரவு செலவு திட்டத்தின் கீழ், தேசிய தானிய இருப்புக்களை உருவாக்க […]





