இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு!
உலகளாவிய மார்பக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இளஞ் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து பாராளுமன்றத்திற்கு வர வேண்டும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (21) அறிவித்தார். நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் துறை வெளியிட்ட அறிக்கையில், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உறுப்பினர் நுழைவாயிலில் ஒரு பேட்ஜை (badge) விநியோகிக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். உலகளாவிய மார்பக புற்றுநோய் தினம் நாளை கடைப்பிடிக்கப்படவுள்ளது. ஒக்டோபர் மாதம் […]