மக்கள் என்னுடன் “செல்பி” எடுக்கின்றனர்: அடுத்த ஜனாதிபதி நான் தானா?
மக்கள் மத்தியில் எனக்கு செல்வாக்கு இருந்தாலும் ஜனாதிபதி பதவிக்கு வரவேண்டும் என்ற கனவு ஒருபோதும் கிடையாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அடுத்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாவிட்டால்கூட குறைந்தபட்சம் 25 எம்.பிக்களாவது கட்சி […]




