தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு- செலவுத் திட்டம் நாளை முன்வைப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நாளை (07) முன்வைக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றுவார். இது 2 ஆம் வாசிப்பாக கருதப்படும். 2 ஆம் வாசிப்புமீதான விவாதம் நாளை மறுதினம் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை நடைபெறும். 14 ஆம் திகதி மாலை 2 ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நடத்தப்படும். […]




