அரசியல் இலங்கை செய்தி

சிறு கட்சிகளுக்கு ரவி வலை!

  • December 25, 2025
  • 0 Comments

ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு (24) ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) பங்கேற்றிருந்தார். இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJP) என்பவற்றை ஒன்றிணைப்பது தொடர்பில் முன்னெடுக்கப்படும் முயற்சி தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த ரவி கருணாநாயக்க மேலும் […]

அரசியல் இலங்கை செய்தி

50 ஆண்டுகால அரசியலில் ரணில் இழைத்த பெரும் தவறு: வெளியான அறிவிப்பு!

  • December 24, 2025
  • 0 Comments

“ முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) மீண்டும் நாடாளுமன்றம் வருவாரா என்பது எனக்கு தெரியாது. இருந்தாலும் அவரின் அனுபவம் எமக்கு தேவை.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி Chaminda Wijesiri தெரிவித்தார். பதுளையில் இன்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றம் வருகின்றார் என வெளியாகும் தகவல் தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த சமிந்த விஜேசிறி எம்.பி. (Chaminda Wijesiri) கூறியவ வருமாறு, […]

அரசியல் இலங்கை செய்தி

கொழும்பில் இனி எங்கள் ஆட்சி: கூட்டு எதிரணி அறிவிப்பு

  • December 23, 2025
  • 0 Comments

“ கொழும்பு மாநகரசபையில் கூட்டு எதிரணியே இனி செல்வாக்கு செலுத்தும். நாமே கொழும்பை ஆள்வோம்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பு மாநகரசபையின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு நேற்று தோற்கடிக்கப்பட்டது. வாக்கெடுப்பின்போது ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் கிடைத்தன. இது தேசிய மக்கள் சக்திக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகின்றது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான்கூறியவை வருமாறு, “கொழும்பு மாநகரசபை […]

அரசியல் இலங்கை செய்தி

இந்தியாவுடனான 7 ஒப்பந்தங்கள் மறைக்கப்படுவது ஏன்?

  • December 22, 2025
  • 0 Comments

இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தங்களை இலங்கை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ இந்திய பிரதமர் மோடி இலங்கை வந்திருந்தவேளை ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. மேற்படி ஒப்பந்தங்களுக்குள் சுகாதாரத்துறை தொடர்பான ஒப்பந்தமும் உள்ளது. இவற்றை வெளிப்படுத்துமாறு நாம் வலியுறுத்தி வருகின்றோம். எனினும், […]

அரசியல் இலங்கை செய்தி

தெற்கு அரசியலில் புது வியூகம்: சஜித், ரணில் விரைவில் நேரடி சந்திப்பு!

  • December 22, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் விரைவில் நேரடி சந்திப்பு நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைந்து பயணிப்பது தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும் வகையிலேயே இதற்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு கட்சிகளிலும் உள்ள மூத்த உறுப்பினர்களின் தலையீட்டையடுத்தே நேரடி சந்திப்புக்குரிய ஏற்பாடு இடம்பெற்றுவருவதாக தெரியவருகின்றது. இணைந்து பயணிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக இரு கட்சிகளில் இருந்தும் பேச்சு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அக்குழுக்கள் சந்தித்து […]

அரசியல் இலங்கை செய்தி

சுகாதார அமைச்சர் குறிவைப்பு: பதவி விலகுமாறு எதிரணி வலியுறுத்து!

  • December 20, 2025
  • 0 Comments

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. “தரமற்ற ஊசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இருவர் உயிரிழந்துள்ளனர். இதற்குரிய பொறுப்பை அமைச்சர் ஏற்கவேண்டும்.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்ஞய பெரேரா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்தபோது தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியே அன்றும் கதைத்தது. […]

அரசியல் இலங்கை செய்தி

ரணில் வேண்டும்: அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது! சஜித் அணி நேசக்கரம்!!

  • December 19, 2025
  • 0 Comments

“ ரணில் விக்கிரமசிங்க அனுபவம்மிக்க தலைவர். அவர் பதவி விலக வேண்டியதில்லை. அவருடன் இணைந்து பயணிக்கவே நாம் விரும்புகின்றோம்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்ஜய பெரேரா தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ரணில் விக்கிரமசிங்க அனுபவம்மிக்க தலைவர். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டவர். அவர் பதவி […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரசு பொறுப்பு கூறவேண்டும்: நாடாளுமன்றில் வலியுறுத்து

  • December 19, 2025
  • 0 Comments

பேரிடரால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (18) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “தாழமுக்கம் தாக்கம் ஏற்படுவதால் சீரற்ற காலநிலை நிலவக்கூடும், இதற்கு தயாராக வேண்டும் என வளிமண்டளவியல் திணைக்களம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தது. வெள்ள அபாயம் குறித்தும் எச்சரிக்கப்பட்டிருந்தது. எனினும், அரசாங்கத்தால் […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடர் குறித்து ஆராய தெரிவுக்குழு: பிரேரணை நாளை கையளிப்பு!

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்ககோரும் யோசனை நாளை (18) சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. எதிரணிகளின் சார்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது. டித்வா புயல் தாக்கம் உட்பட சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தது என எதிரணிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. இவ்வாறு எச்சரிக்கை விடுத்தும், அனர்த்தங்களை குறைப்பதற்கு – கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற விமர்சனத்தையும் முன்வைத்துவருகின்றன. இந்நிலையிலேயே இது […]

அரசியல் இலங்கை செய்தி

அவசர நிதிக்கான குறை நிரப்பு பிரேரணை நாளை சமர்ப்பிப்பு!

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கை நாடாளுமன்றம் நாளை (18) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது. டித்வா புயல் தொடர்பான நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அவசர நிதியை பெறுவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவதற்காகவே விசேட சபை அமர்வு நடக்கின்றது. இதற்கமைய 500 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை சபையில் முன்வைக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது. இந்த யோசனைக்கு எதிரணிகள் முழுமையான ஆதரவை வழங்கவுள்ளன என்று அறியமுடிகின்றது. ஜனாதிபதி வசம் நிறைவேற்று அதிகாரம் இருந்தாலும், நாடாளுமன்றத்துக்கே நிதி அதிகாரம் உள்ளமை […]

error: Content is protected !!