அரசியல் இலங்கை செய்தி

என்.பி.பி. ஆட்சிமீது சர்வதேசம் நம்பிக்கை: தொடரும் உதவி!

  • December 20, 2025
  • 0 Comments

“ஊழல், மோசடி அற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்மீது அனைத்துலக சமூகத்துக்கு நம்பிக்கை இருப்பதால், இலங்கை மீண்டெழுவதற்கு நிச்சயம் வெளிநாட்டு உதவிகள் தொடர்ந்து கிடைக்கும்.” இவ்வாறு அமைச்சர் சமந்த வித்யாரத்ன நம்பிக்கை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிகளை வழங்கிய உலக நாடுகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். மீட்பு பணி, மருத்து சேவை, விநியோகம் என சகல வழிகளிலும் உதவிகள் கிடைக்கப்பெற்றன. அடுத்தக்கட்டமாக மீள் கட்டுமான பணிகளை செய்ய […]

இலங்கை

இலங்கையில் எதிரணிகளின் ஒன்றிணைவு ஆளும் கட்சிக்கு சவாலாக அமையாது!

  • October 24, 2025
  • 0 Comments

இலங்கையில் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எவ்விதத்திலும் சவாலாக அமையாது என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். எதிர்க்கட்சிகளுக்கு சவால் என்பதாலேயே ஒன்றிணைந்து பயணிப்பது பற்றி பரிசீலிக்கின்றன. அது அத்தரப்புகளின் சுயநல அரசியலின் வெளிப்பாடாகும் எனவும் அமைச்சர் கூறினார். ” நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தவேளை அவர்கள் ஒன்றிணையவில்லை. போர் நடந்த காலகட்டத்தில்கூட இணைந்து பயணிக்கவில்லை. தற்போது இணைகின்றனர் எனில் அது அவர்களின் வங்குரோத்து அரசியலை வெளிப்படுத்துகின்றது.” என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

error: Content is protected !!