அநுரவுக்கு எதிராக குற்றப் பிரேரணை: மஹிந்த அணி வியூகம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்றை கொண்டுவருமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மொட்டு கட்சி செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் மேற்படி கோரிக்கையை முன்வைத்தார். “ பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு தகவல் கிடைத்தும் அனர்த்தங்களால் ஏற்பட்ட இழப்புகளை கட்டுப்படுத்த முடியாமல்போயுள்ளது. இது விடயத்தில் தனது இயலாமை மற்றும் கவனயீனத்தை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்துவருகின்றது. […]




