பதவி துறக்க மாட்டேன்: கட்சி மறுசீரமைக்கப்படும்! ஜீவன் அறிவிப்பு!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் நோக்கம் தனக்கு இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார். அவரால் இன்று (19) ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதொகாவின் பொதுச்செயலாளர் பதவியை ஜீவன் தொண்டமான் விரைவில் இராஜினாமா செய்யவுள்ளார் என செய்திகள் வெளியாகி இருந்தன. காங்கிரசுக்குள் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாகவே அவர் இம்முடிவை எடுத்துள்ளார் எனவும் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இது தொடர்பான சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கும் நோக்கில் இதொகாவின் […]




