இலங்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: புலனாய்வு பிரிவும் களமிறக்கம்!
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வழிபாட்டு இடங்கள், முன்னணி ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாத்தளங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் வணிக வளாகங்கள், அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்கள் உட்பட முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும், பொலிஸ்மா அதிபரால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் போக்குவரத்து […]




