இலங்கை

இலங்கையில் முட்டை விலையில் ஏற்பட்ட மாற்றம்

  • October 8, 2025
  • 0 Comments

இலங்கையில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஒரு வெள்ளை முட்டை 28 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு முட்டை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக முட்டையின் விலை சிறிதளவு அதிகரித்திருந்த நிலையில் மீண்டும் விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.