அரசியல் இலங்கை செய்தி

31 ஆம் திகதிக்குள் செய்து முடிங்கள்: ஜனாதிபதி அதிரடி உத்தரவு!

  • December 20, 2025
  • 0 Comments

“ரீ பில்டிங் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இன்று (20) நடைபெற்றது. பாதுகாப்பு, விவசாயம், நீர்ப்பாசனம், நீர் வழங்கல், மீன்பிடி, போக்குவரத்து, வீடமைப்பு மற்றும் நிர்மாணம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சுகளின் செயலாளர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். வீடுகளை சுத்தம் செய்வதற்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? திங்கள் மதிப்பீட்டு அறிக்கை கையளிப்பு!

  • December 19, 2025
  • 0 Comments

பேரிடரால் இலங்கைக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பான உத்தேச மதிப்பீட்டு அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை உலக வங்கியால் கையளிக்கப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்படி தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு, “ பேரிடரால் ஏற்பட்ட மொத்த இழப்பு தொடர்பான உத்தேசத்தை மேற்படி அறிக்கைமூலம் அறியமுடியும். 500 பில்லியன் ரூபா மேலதிக நிதி சந்தைக்குவரும்போது ஏற்படும் பணவீக்கம் தொடர்பான காரணங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமெனில் பொருட்கள் […]

செய்தி

அமெரிக்க பிரதிநிதி வந்துசென்ற கையோடு சீன பிரமுகரும் கொழும்பு வருகை!

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு துணைத் தலைவர் வாங் டோங்மிங் , கொழும்பில் முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார். மூன்று நாள் பயணமாக நேற்று கொழும்பு வந்த அவரை, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, விமான நிலையம் சென்று வரவேற்றார். இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் பல அதிகாரிகளும் இந்த வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். சீனா தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு துணைத் தலைவர் வாங் டோங்மிங் , இலங்கை ஜனாதிபதி, பிரதமர் […]

அரசியல் இலங்கை செய்தி

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள அவசர உத்தரவு!

  • December 13, 2025
  • 0 Comments

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சேதங்களுக்கான இழப்பீடு வழங்கும் பணியை விரைவுபடுத்தி, விவசாயம், மீன்பிடி மற்றும் தொழில்துறைகளை மீட்டெடுக்க துரித நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் ஆலோசனை வழங்கினார். பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் பணியை டிசம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார். புத்தளம் மாவட்ட செயலகத்தில் இன்று (13) முற்பகல் நடைபெற்ற […]

இலங்கை செய்தி

உயர் நீதிமன்ற நீதியரசராக கிஹான் ஹிமான்ஷு குலதுங்க நியமனம்

  • December 10, 2025
  • 0 Comments

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கே.எம். கிஹான் ஹிமான்ஷு குலதுங்க, உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் அவர் இன்று பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

இலங்கை

இலங்கையில் தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த ஊதியத்தை உயர்த்த ஜனாதிபதி உறுதி!

  • October 12, 2025
  • 0 Comments

தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை  1,750 ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறுகிறார். பண்டாரவளையில் நடைபெற்ற மலையகம் சமூகத்தைச் சேர்ந்த 2,000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இந்த மலையகம் சமூகம் ஒரு சிறந்த பணியைச் செய்து வருகிறது. அவர்கள் 202 ஆண்டுகளாக வாழ்ந்து இறந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, ஒரு அரசாங்கமாக, அவர்களுக்கு அடிப்படைத் […]

error: Content is protected !!