அரசியல் இலங்கை செய்தி

என்.பி.பி. ஆட்சியை நம்புகிறது சர்வதேசம்: குவிகிறது உதவி!

  • December 11, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் ஊழல், மோசடி இடம்பெறாது என சர்வதேச சமூகம் நம்புகின்றது. அதனால்தான் சர்வதேச உதவிகள் அதிகளவு கிடைக்கப்பெறுகின்றன என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “இலங்கை அரசாங்கம்மீது சர்வதேசம் நம்பிக்கை வைத்துள்ளது. இந்த ஆட்சியின்கீழ் ஊழல், மோசடிகள் இடம்பெறாது என்பதாலேயே அதிகளவு சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன. இந்த ஆட்சியின்கீழ் சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெறமாட்டாது என சிலர் கூறிவந்தாலும் அது பொய்யென்பது உறுதியாகியுள்ளது. புலம்பெயர்ந்து […]

அரசியல் இலங்கை

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: மொட்டு கட்சி எச்சரிக்கை!

  • November 25, 2025
  • 0 Comments

அச்சுறுத்தல்கள்மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் பயணத்தை தடுக்க முடியாது என்று அக்கட்சியின் உறுப்பினர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பதாலேயே எமக்கு வீதிக்கு இறங்கி அதனை நினைவுபடுத்த வேண்டி ஏற்பட்டது. அந்தவகையில் எமது நுகேகொடை கூட்டம் வெற்றியளித்தது. மக்களுக்காக எமது […]

அரசியல் இலங்கை

இலங்கையில் பிராந்திய ராஜ்ஜியம் கிடையாது! 

  • November 25, 2025
  • 0 Comments

இலங்கையில் எந்த இடத்திலும் தொல்பொருள் இடங்களை அடையாளப்படுத்தும் இயலுமை தொல்பொருள் திணைக்களத்துக்கு உள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். ஒருசிலர் தமக்கு தமக்கு பிராந்திய ராஜ்ஜியம் இருப்பதாக நினைத்து , தொல்பொருள் சின்னங்களை அகற்றி இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க முற்படுகின்றனர். இதற்கு இடமளிக்கப்படமாட்டாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். வாழைச்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் தொல்பொருள் அடையாளப்படுத்தல் பெயர் பலகைகள் அகற்றப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். “ தொல்பொருள் திணைக்களத்தால் […]

அரசியல் இலங்கை

என்.பி.பி. அரசுக்கு எதிராக இரு முனை தாக்குதல்: எதிரணி வியூகம்!

  • November 24, 2025
  • 0 Comments

நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காத நிலையில், அக்கூட்டத்தை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராட்டியுள்ளார். நுகேகொடை கூட்டம் வெற்றிகரமானது எனவும், இதுபோன்ற நடவடிக்கையை தமது கட்சியும் ஆரம்பிக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் தெரிவித்தார். “ நுகேகொடை கூட்டத்துக்கு எவரையும் வலுக்கட்டாயமாக அழைத்துவரவில்லை. அவ்வாறு அழைத்து வந்திருந்தால் கொட்டும் மழைக்கு மத்தியில் மக்கள் நின்றிருக்கமாட்டார்கள். கூட்டம் மூலம் வழங்கப்பட்ட செய்தியை அரசாங்கம் உணர […]

அரசியல் இலங்கை

நுகேகொடை கூட்டம் வெத்து வேட்டு!

  • November 24, 2025
  • 0 Comments

நுகேகொடை கூட்டமானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எவ்விதத்திலும் சவாலாக அமையவில்லை என்று பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார். நுகேகொடையில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தால் அரசாங்கம் கதிகலங்கி நிற்கின்றது என கூட்டு எதிரணியினர் எனக் கூறிக்கொள்ளும் தரப்பு கூறிவரும் நிலையிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். “ நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்றிருந்த அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்குகள் உள்ளன. இதற்கு அஞ்சியே தமது சில சகாக்களை அழைத்துக்கொண்டு அவர்கள் கொழும்பு வந்துள்ளனர். இந்த கூட்டம் […]

அரசியல் இலங்கை

என்பிபி அரசு மஹிந்தவிடம் மன்னிப்பு கோர வேண்டும்!

  • November 22, 2025
  • 0 Comments

ராஜபக்சக்களுக்கு எதிரான முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் மெதமுலன சென்று மஹிந்த ராஜபக்சவிடம் அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும் என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில வலியுறுத்தினார். நுகேகொடை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ ராஜபக்சக்களின் பணம் உகண்டாவில் உள்ளது. ராஜபக்சக்களின் மகன்மார் வளர்க்கும் நாய்க்கு தங்க சங்கிலி போடப்பட்டுள்ளது என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இவற்றை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் மெதமுலனயில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் […]

இலங்கை

என்.பி.பி. ஆட்சியை விரட்ட சஜித்துக்கும் அழைப்பு!

  • November 21, 2025
  • 0 Comments

கூட்டு எதிரணியின் அடுத்த கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். நுகேகொடை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ 76 வருடகாலம் நாட்டை நாம் நாசமாக்கவில்லை. 1965 இல் ஜே.வி.பி. உதயமான பின்னரே நாடு வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. எல்லா திட்டங்களையும் அவர்கள் குழப்பினார்கள். எனவே, 76 வருடகால சாபம் நாம் அல்லர். ஜே.வி.பியினர் என்பதை புரிந்துகொள்ள […]

இலங்கை

பாதீடு தொடர்பில் நவம்பர் 14 இல் முதல் பலப்பரீட்சை! 

  • November 12, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், பாதீடு தொடர்பான முதலாவது பலப்பரீட்சையை தேசிய மக்கள் சக்தி நாளை மறுதினம் 14 ஆம் திகதி எதிர்கொள்கின்றது. 2 ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு 14 ஆம் திகதி மாலை இடம்பெறவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த 7 ஆம் திகதி வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்தார். 2 ஆம் வாசிப்புமீதான விவாதம் 8 ஆம் […]

இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு- செலவுத் திட்டம் நாளை முன்வைப்பு

  • November 6, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நாளை (07) முன்வைக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றுவார். இது 2 ஆம் வாசிப்பாக கருதப்படும். 2 ஆம் வாசிப்புமீதான விவாதம் நாளை மறுதினம் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை நடைபெறும். 14 ஆம் திகதி மாலை 2 ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நடத்தப்படும். […]

error: Content is protected !!