என்.பி.பி. அரசை கைவிட்டனரா புலம்பெயர் தமிழர்கள்?
புலம்பெயர் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாததாலேயே ஆளுங்கட்சியான ஜே.வி.பியின் செயலாளருக்கு எதிராக லண்டனில் போராட்டம் வெடித்தது என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் அடியோடு நிராகரித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது ஜே.வி.பியின் செயலாளருக்கு எதிராக லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் சிலரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. தேர்தல் காலத்தில் ஆதரவு வழங்கிய அந்த குழு தற்போது விலகிச் சென்றது ஏன் எனவும் வினவப்பட்டது. இதற்கு பதிலளித்த […]




