இலங்கையில் மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதில் நிலவும் சிக்கல்கள்!
இலங்கையில் மருந்து பற்றாக்குறைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் தற்போதுள்ள சில சட்டங்கள் தடையாக இருப்பதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார். அந்த சட்டங்களை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாற்றுவது சிக்கலாக தோன்றினாலும், இது தொடர்பான சில சட்டங்களும் விதிமுறைகளும் புதியவை அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள விபாசி பௌத்த மையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இந்த கருத்துக்களை முன்வைத்தார். […]




