சுற்றுலா பயணத்தை ஊக்குவிக்கும் இலங்கையின் புதிய விசா அறிவிப்பு
மாலத்தீவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம், சுற்றுலா அல்லது வருகை நோக்கங்களுக்காக இலங்கைக்கு செல்லும் மாலத்தீவு குடிமக்களுக்கு 90 நாட்கள் செல்லுபடியாகும் வருகை விசா வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அறிவிப்பின் படி, மாலத்தீவு நாட்டவர்கள் இலங்கைக்கு பயணம் செய்யும் முன் மின்னணு பயண அனுமதி (ETA) பெற வேண்டிய அவசியம் இல்லை. இந்த விசா விலக்கு ஏற்பாடு, பயணிகளை எளிதாகப் பயணிக்க உதவும் என்றும், இலங்கை–மாலத்தீவு நாடுகளுக்கிடையிலான மக்களிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.




