மீண்டும் தாய் வீடு திரும்பும் மைத்திரி?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணைவது மிகவும் நல்லது என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன பக்கம் இருந்த விஜயதாச ராஜபக்ச சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறினார். “ கட்சி தொடர்பில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை மீளப்பெற்று இணைவது நல்லது. எனக்கு எதிராகவும் வழக்குகள் உள்ளன. அவை முடிவடைந்த பின்னரே நான் முடிவொன்றை எடுப்பேன். விஜயதாச ராஜபக்ச எனக்கு அறிவித்துவிட்டே சென்றார். […]




