அரசியல் இலங்கை செய்தி

ஜே.வி.பியுடனான அரசியல் உறவை வலுப்படுத்துகிறது சீன கம்யூனிஸ்ட் கட்சி!

  • December 25, 2025
  • 0 Comments

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (CPC), ஜே.வி.பிக்கும் (JVP) இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக்குழுவினர் கொழும்பு,(colombo) பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. தலைமையகத்துக்கு (JVP headquarters) நேற்று (24) சென்றிருந்தனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழு உறுப்பினரும், ஷிசாங் ( Xizang) தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளருமான வாங் ஜூவான்செங் (Wang Junzheng) தலைமையிலான குழுவினரே இவ்வாறு சென்றிருந்தனர். ஜே.வி.பியின் செயலாளர் (JVP Secretary) […]

அரசியல் இலங்கை செய்தி

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம்: சத்திய கடதாசி வழங்க தயாராகும் நாமல்!

  • December 22, 2025
  • 0 Comments

“ ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டதாகக் கூறப்படும் டொலர்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு இதுவே சரியான தருணமாகும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தேவைப்படும் பட்சத்தில் சத்திய கடதாசியை வழங்குவதற்குகூட நான் தயாராகவே இருக்கின்றேன் எனவும் அவர் கூறியுள்ளார். “ராஜபக்சக்கள் வெளிநாடுகளில் டொலர்களை பதுக்கியுள்ளனர் என தற்போதைய ஆட்சியாளர்களால் அன்று குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த டொலர்களை நாட்டுக்கு கொண்டுவந்தால் நல்லது. அதற்கு அரசாங்கத்தக்கு தேவைப்படும் சகல ஒத்துழைப்பை வழங்குவதற்கு […]

அரசியல் இலங்கை செய்தி

ஜே.வி.பியுடன் விமல் அரசியல் போர்: கடும் விமர்சனக் கணைகள் தொடுப்பு!

  • December 20, 2025
  • 0 Comments

ஜே.வி.பியானது அதன் ஆரம்பகால கொள்கைகளில் இருந்து தற்போது திசைமாறி பயணித்துக்கொண்டிருக்கின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி. ஊடாகவே தனது அரசியல் பயணத்தை விமல் வீரவன்ச ஆரம்பித்தார். எனினும், அவரின் சர்ச்சைக்குரிய நடவடிக்கை காரணமாக அவரை கட்சியை விட்டு வெளியேறும் முடிவை ஜே.வி.பி. எடுத்திருந்தது. அதற்கு முன்னதாகவே அவர் பதவி விலகி, […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடர் நிவாரணம்: கட்சி நிதியை ஜே.வி.பி. பயன்படுத்தாதது ஏன்?

  • December 16, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமது கட்சி நிதியை ஜே.வி.பி. ஏன் இன்னும் பயன்படுத்தாமல் உள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாமர சம்பத் எம்.பி. கேள்வி எழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு. “ பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பண்டாரநாயக்க நிதியத்தில் இருந்து 25 கோடி ரூபாவை சந்திரிக்கா அம்மையார் வழங்கினார். பண்டாரநாயக்க நிதியத்தில் எமது கட்சிக்கும் பங்களிப்பு உள்ளது. எனவே, சந்திரிக்காவின் நடவடிக்கை எமக்கு பெருமை அளிக்கின்றது. […]

அரசியல் இலங்கை செய்தி

என்.பி.பி. ஆட்சியை நம்புகிறது சர்வதேசம்: குவிகிறது உதவி!

  • December 11, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் ஊழல், மோசடி இடம்பெறாது என சர்வதேச சமூகம் நம்புகின்றது. அதனால்தான் சர்வதேச உதவிகள் அதிகளவு கிடைக்கப்பெறுகின்றன என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “இலங்கை அரசாங்கம்மீது சர்வதேசம் நம்பிக்கை வைத்துள்ளது. இந்த ஆட்சியின்கீழ் ஊழல், மோசடிகள் இடம்பெறாது என்பதாலேயே அதிகளவு சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன. இந்த ஆட்சியின்கீழ் சர்வதேச உதவிகள் கிடைக்கப்பெறமாட்டாது என சிலர் கூறிவந்தாலும் அது பொய்யென்பது உறுதியாகியுள்ளது. புலம்பெயர்ந்து […]

அரசியல் இலங்கை

மாவீரர் தின நினைவுகூரல் அனுமதியை மூடிமறைக்கவே லண்டனில் போராட்டம்!

  • November 26, 2025
  • 0 Comments

மாவீரர் தினத்தை நினைவுகூர இடமளிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மூடிமறைக்கும் நோக்கிலேயே லண்டனில் போலி ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார். ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு எதிராக லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் சிலர் நடத்திய போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். “ மேற்படி போராட்டத்தையடுத்து புலிகளின் எதிர்ப்புக்கு ஜே.வி.பி. அரசாங்கமும் ஆளாகிவிட்டதென சிலர் நினைக்கலாம். இது கொள்கை தொடர்பான எதிர்ப்பு அல்ல. ஜனாதிபதி தேர்தலுக்கு […]

error: Content is protected !!