அரசியல் இலங்கை

கச்சதீவு ஆலய வருடாந்த திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

  • February 24, 2026
  • 0 Comments

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். திருவிழா தொடர்பான இறுதிக்கட்ட கலந்துரையாடல், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (24) நடைபெற்றுள்ளது. இதன்போது, இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும்  பக்தர்களின் எண்ணிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், கழிவறை வசதிகள், குடிநீர் தேவைகள், பாதுகாப்பு […]

இலங்கை

வெற்றிலைப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை

  • February 22, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெற்றிலைப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி அவரது சமூக வலைத்தளத்தில் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்தின் பொது இடங்களை பாதுகாக்கும் விதிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு அமைவாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் வெற்றிலைப் பயன்படுத்துதல் மற்றும் எச்சில் துப்புதல் முற்றாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து பல அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைத்தியசாலை […]

இலங்கை செய்தி

கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

  • January 27, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டார். கடந்த இரு நாட்களாக வடக்குக்குக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அதன் பின்னர் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பதிவாளர், நிதியாளர், நூலகர் மற்றும் அரசறிவியல், பொருளியல் மற்றும் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறைகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்புகளின் போது, அரசியல் பொருளாதார நிலைமைகள் […]

அரசியல் இலங்கை செய்தி

திஸ்ஸ விகாரையை அகற்ற முற்பட்டால் நடப்பது வேறு: மஹிந்த அணி எச்சரிக்கை!

  • December 23, 2025
  • 0 Comments

திஸ்ஸ விகாரைக்கு அழுத்தம் கொடுத்து அதனை அகற்றுவதற்கு முற்பட்டால் அதற்கு எதிராக எழுந்து நிற்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “யாழ்ப்பாணத்தில் இராணுவ வசம் இருந்த காணியில் 98 சதவீதம் விடுவிக்கப்பட்டுவிட்டது. எனவே, திஸ்ஸ விகாரை தொடர்பில் அநீதியான தகவல்களை பரப்ப முற்படக்கூடாது. சிங்கள, பௌத்த மக்கள் ஒருபோதும் கோவில்களுக்கு எதிராக போராட்டம் […]

இலங்கை

கனடாவில் இருந்து செல்வம் அடைக்கலநாதன் எம்.பிக்கு வந்த கொலை மிரட்டல்

  • November 4, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையில் இன்று முறைப்பாடு அளித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் கனடாவில் வசிக்கும் ஒருவர் தொலைபேசியில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக  தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இலங்கை

பிரான்சில் இருந்து 13 நாடுகளை மிதிவண்டியில் கடந்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இளைஞர்!

  • October 22, 2025
  • 0 Comments

பிரான்சில் (France) இருந்து சுமார் 13 நாடுகளை மிதிவண்டியில் கடந்த நபர் ஒருவர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். 28 வயதுடைய சூரன் என்ற நல்லூரைச் சேர்ந்த  இளைஞர் “பாரிஸ் டு யாழ்ப்பாணம்”(“Paris to Jaffna)  என்ற தலைப்பில் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். சுமார் 10 ஆயிரம் கிலோமீற்றர் பயணம் செய்த அவர், யாழப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயில் மற்றும் யாழ் நூலகம் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளார். தனது பயணம் குறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், “நான் செப்டம்பர் […]

error: Content is protected !!