உலகம்

ஈரானின் குடியிருப்புகள் மீது ஏவுகணை வீச்சு: 5 பேர் பலி

  • March 3, 2026
  • 0 Comments

ஈரானின் ஹமதான் மாகாணத்தில் உள்ள மக்கள்செறிந்து வாழும் குடியிருப்புகள் மீது அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டுப் படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதுடன், 25 பேர் வரை காயமடைந்துள்ளதாக aljazeera செய்திகள் தெரிவிக்கின்றன. ஹமதான் பகுதியில் உள்ள இரண்டு அவசர சிகிச்சை மையங்கள் இந்தத் தாக்குதலில் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் காயமடைந்தவர்களில் பல மருத்துவத் தொழில்நுட்பவியலாளர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடியிருப்புகள் மற்றும் சிவில் உட்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் […]

உலகம்

டுபாய் சொகுசு விருந்தகம் மீது தாக்குதல்

  • March 1, 2026
  • 0 Comments

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் பாரிய இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, டுபாயின் புகழ்பெற்ற ‘பாம் ஜுமேரா’ (Palm Jumeirah) பகுதியில் உள்ள ‘ஃபேர்மாண்ட் தி பாம்’ (Fairmont The Palm) ஐந்து நட்சத்திர விருந்தகம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்கியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது நால்வர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, பஹ்ரைன் மனாமா நகரில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது படைப்பிரிவு (Fifth Fleet) தலைமையகத்திற்கு […]

இலங்கை உலகம்

மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு மூடல்

  • February 28, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தமது வான்பரப்புகளை மூடியமையினால் பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் பிற வடக்கு நாடுகளுக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் விமானங்கள் சவூதி அரேபிய வான்வெளி வழியாக திருப்பி விடப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதேவேளை, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்திய பதற்றங்கள் அதிகரித்து […]

error: Content is protected !!