இந்தோனேசியாவில் வலுவான நிலநடுக்கம் பதிவு!
இந்தோனேசியாவின் பப்புவா (Papua) மாகாணத்தில் இன்று வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில் பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேசியாவின் செரம்பன் (Seremban) மாவட்டத்தில் 40 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்களுக்கோ அல்லது சொத்துக்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை, மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.