அவசர கால சட்டம்: மனித உரிமை ஆணைக்குழு அதிருப்தி!
பேரிடரைத் தொடர்ந்து நவம்பர் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட அவசரகால விதிமுறைகள் குறித்து கவலை தெரிவித்து, மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. பேரிடர் மற்றும் மீட்பு சவால்களின் அளவை ஒப்புக்கொண்டாலும், அவசரகாலச்சட்டத்தின் பல விதிகள், அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் மற்றும் அனைத்துலக மனித உரிமைகள் தரநிலைகளுக்கு முரணானவை என்று மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது சொத்துக்களைக் கோருவதற்கான பரந்த அதிகாரங்கள், கருத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள், தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 365 […]




