பிரான்ஸில் 48 மணிநேரத்தில் புதிய பிரதமரை நியமிக்க நடவடிக்கை!
பிரான்ஸில் 48 மணிநேரத்தில் புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட சில திட்டங்களுக்கு எதிர்கட்சிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட செபஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவும், அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் விரைவில் புதிய பிரதமரை நியமிக்கவேண்டிய கட்டாயம் மக்ரோனுக்கு உள்ளது. இதற்கிடையே பெரும்பான்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை […]