ஐரோப்பா

லண்டனில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ள கடையில் தீவிபத்து!

  • October 17, 2025
  • 0 Comments

லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள கடையொன்றில் நேற்று மாலை தீவிபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஃபாரஸ்ட் ஹில்லில் (Forest Hill)  உள்ள பெர்ரி வேலில் (Perry Vale) தீவிபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 15 தீயணைப்பு வாகனங்களில் வருகை தந்த 100 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கட்டிடத்தின் தரைத்தளத்தில்  கடை உள்ளது, அதன் மேல் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளதாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று […]

உலகம்

இந்தோனேசியாவில் (Indonesia) கப்பல் கட்டும் தளத்தில் விபத்து – பலர் உயிரிழப்பு!

  • October 15, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் (Indonesia)  பாட்டம் (Batam) தீவில் உள்ள ஒரு கப்பல் கட்டும் தளத்தில் இன்று வெடிப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டான்ஜுன்குன்காங் (Tanjunguncang) துறைமுகத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில்  பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் கடமையில் ஈடுபட்டிருந்தபோது எரிபொருள் டேங்கரில் தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பாரிய வெடிப்பு சம்பவம் ஏற்பட்டதாக மாகாண காவல்துறைத் தலைவர் அசெப் சஃப்ருதீன் (Asep Safrudin) தெரிவித்துள்ளார். […]

ஐரோப்பா

பிரான்ஸில் பிரதமர் அலுவலகம் அருகே வெடிப்பு சம்பவம்- பற்றி எரிந்த வேன்!

  • October 7, 2025
  • 0 Comments

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sebastien Lecornu) தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் பிரதமர் அலுவலகம் அருகே வெடிச்சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது தலைநகரமான பாரிஸில் வேன் ஒன்று தீப்பிடித்து எரிந்ததாகவும் கூறப்படுகிறது. அவசர சேவைகள் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். அத்துடன் குறித்த வேன் ஒரு பொது நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர் ஒருவர்  இயந்திரக் கோளாறால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் […]