உலகம்

இந்தோனேசியாவில் வலுவான நிலநடுக்கம் பதிவு!

  • October 19, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் பப்புவா (Papua) மாகாணத்தில் இன்று  வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில் பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேசியாவின் செரம்பன் (Seremban) மாவட்டத்தில் 40 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்களுக்கோ அல்லது சொத்துக்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை, மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.

உலகம்

 அண்டார்டிகா கடற்கரையில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!

  • October 11, 2025
  • 0 Comments

அண்டார்டிகா கடற்கரையில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்று பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சிலி வரை உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடற்பகுதி உலகின் மிகவும் கரடுமுரடான பகுதி எனவும் குறிப்பிடப்படுகிறது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் சிறிது நேரத்திலேயே அந்த எச்சரிக்கை மீளப் பெறப்பட்டது.

ஆசியா

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு – சுனாமி தொடர்பில் வெளியான தகவல்!

  • October 10, 2025
  • 0 Comments

தெற்கு பிலிப்பைன்ஸ் மாகாணத்தில் இன்று அதிகாலை  7.6 ரிக்டர் அளவிலான  நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஹொனலுலுவில் (Honolulu) உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டருக்குள்  ஆபத்தான அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறியது. சுனாமி ஏற்படும் அபாயம் அதிகம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

வட அமெரிக்கா

கலிஃபோர்னியாவில் மிதமான நிலநடுக்கம் பதிவு!

  • October 5, 2025
  • 0 Comments

கலிஃபோர்னியாவின் Big Bear Cityஇற்கு அருகாமையில் இன்று 3.4 ரிக்டர் அளவிலான  நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதிகாலை 2:51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் குறித்த நிலநடுக்கத்தினால் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை கடந்த வாரத்தில் இப்பகுதியில் 2.5 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவிலான மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படும்போது மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகளையும் அந்நாட்டு […]