இந்தியா

எரிபொருள் கொள்வனவு தொடர்பில் ட்ரம்புடன் பேசினாரா மோடி?

  • October 16, 2025
  • 0 Comments

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் வாங்குவதை நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்று இந்திய பிரதமர் தனக்கு உறுதியளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே நேற்று (15) தொலைபேசி உரையாடல் எதுவும் நடைபெறவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடிக்கும் அதிபர் டிரம்புக்கும் இடையே நேற்று உரையாடல் அல்லது தொலைபேசி அழைப்பு நடந்ததா என்பது […]

உலகம் செய்தி

காசா அமைதி மாநாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய ட்ரம்ப் – மக்ரோன் இடையிலான கைகுலுக்கல்

  • October 14, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இடையிலான சங்கடமான கைகுலுக்கல் சர்ச்சையாக மாறியுள்ளது. எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக்கில் (Sharm El-Sheikh) நேற்று நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம், அங்கிருந்த அனைவர் மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. கைகுலுக்கல் என்பது சாதாரணமான விடயமாக இருந்த போதிலும், இரு நாட்டுத் தலைவர்களின் கைகுலுக்கள் விடயத்தில் மறைமுகமான ஆக்ரோஷம் காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது. ட்ரம்ப் – மக்ரோன் கைகுலுக்கல் விவகாரம் […]

உலகம்

காசா அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

  • October 14, 2025
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையிலான போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும் அமைதி ஒப்பந்தத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கையெழுத்திட்டுள்ளார். ட்ரம்ப் முன்வைத்த 20 அம்சங்களை உள்ளடக்கிய இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு, இஸ்ரேல் மற்றும் ஹாமாஸ் அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளன. அதற்கமைய, இஸ்ரேல் இராணுவத்தினால் கைது செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட சுமார் இரண்டாயிரம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பிடம் பணய கைதிகளாக இருந்த அனைவரும் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த அமைதி […]

ஐரோப்பா

உக்ரைன் போர் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதியிடம் ஜெலென்ஸ்கி விடுத்த கோரிக்கை

  • October 12, 2025
  • 0 Comments

உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமைதிக்கான மத்தியஸ்தராக செயல்பட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கில் செய்தது போல், உக்ரைனிலும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று ஜனாதிபதி ட்ரம்புடன் தொலைபேசி உரையாடலில் ஜெலென்ஸ்கி இந்தக் கோரிக்கையை விடுத்ததாகக் கூறுகிறார். அமெரிக்க ஜனாதிபதி ஒரு பிராந்தியத்தில் போரை நிறுத்த முடிந்தால், அவர் நிச்சயமாக மற்ற போர்களை நிறுத்த முடியும் என்று உக்ரைன் ஜனாதிபதி கூறினார். இதனிடையே, ரஷ்யா […]

உலகம்

அமெரிக்காவின் புதிய வரி அறிவிப்பு – பங்குச் சந்தையில் அதிர்வலை

  • October 12, 2025
  • 0 Comments

அமெரிக்க அரசாங்கத்தின் புதிய வரி அறிவிப்பால், அங்குள்ள பங்குச் சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது முதலீட்டாளர்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக முக்கிய குறியீடுகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. Nasdaq குறியீடு 3.5 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. இது சமீபத்திய காலக்கட்டத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாகக் கருதப்படுகிறது. இதேபோல், S&P 500 குறியீடும் சுமார் 3 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வீழ்ச்சி, புதிய வரி நடவடிக்கைகள் உலக வர்த்தகத்தை எப்படி பாதிக்கும் என்ற அதிர்ச்சியை பிரதிபலிக்கின்றது. முதலீட்டாளர்கள், […]

உலகம்

79 வயதான ட்ரம்பின் இதய வயது 65 – மருத்துவர்கள் வெளியிட்ட அறிவிப்பு

  • October 12, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் மிகச் சிறந்த உடல்நிலையில் இருப்பதாக அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. ட்ரம்பின் உண்மையான வயதைவிட அவரது இதய வயது 14 ஆண்டுகள் குறைவாக உள்ளதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ட்ரம்ப் வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டுள்ளார். அது அவரது தொடர்ச்சியான சுகாதாரப் பராமரிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதில் ஆய்வுக்கூடச் சோதனைகள், நிபுணத்துவ மருத்துவர்கள் மேற்கொண்ட […]

உலகம்

நோபல் பரிசை வெல்லும் கனவு தகர்ந்ததால் கடும் கோபத்தில் ட்ரம்ப்

  • October 11, 2025
  • 0 Comments

அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காதமையால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கோபமடைந்துள்ளார். மேலும் வெள்ளை மாளிகை கடுமையாக எதிர்ப்பு வெளியிட ஆரம்பித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டதாக நோர்வே நோபல் குழு நேற்று அறிவித்துள்ளது. இதனையடுத்து நோர்வே நோபல் குழு அமைதியை விட அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பதாக வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியுள்ளது. உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதை வெல்ல ஜனாதிபதி டொனால்ட் […]

உலகம்

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்ற ஜனாதிபதி ட்ரம்பிற்கு அழைப்பு

  • October 10, 2025
  • 0 Comments

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வருமாறு அந்நாட்டின் சபாநாயகர் அமீர் ஓஹானா அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி ட்ரம்பை நவீன வரலாற்றின் யூத மக்களின் மிகச்சிறந்த நண்பர் என்று அவர் அழைத்துள்ளார். இந்த கோரிக்கையை முன்வைத்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக, இஸ்ரேலிய சபாநாயகர் அமீர் ஓஹானா தெரிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷிற்கு பின்னர், இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ள அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மாறவுள்ளார். இஸ்ரேலின் நெருக்கமான […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

ட்ரம்பின் காசா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் – நெதன்யாகு வெளியிட்ட அறிவிப்பு

  • October 10, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை சமாதான உடன்படிக்கைக்கு இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சமாதான உடன்படிக்கைக்கு இணங்க வேண்டும் என ஹமாஸ் அமைப்புக்கு டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் இறுதி எச்சரிக்கையை விடுத்திருந்தார். இவ்வாறான நிலையில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் சமாதான உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளன. இணக்கப்பாட்டுக்கு அமைய எதிர்வரும் திங்கள் […]

உலகம் செய்தி

அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிப்பு – நம்பிக்கையை இழந்த ட்ரம்ப்

  • October 10, 2025
  • 0 Comments

அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கையை இழந்துள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கிடைக்குமா எனத் தெரியவில்லை என ட்ரம்ப் கூறியுள்ளார். பாகிஸ்தான் உட்பட பல நாடுகள், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் பெயரைப் பரிந்துரை செய்துள்ளன. இந்நிலையில், தங்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுமா என ட்ரம்பிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ட்ரம்ப், வேறு எந்தத் தலைவரும் செய்யாத அளவில் 7 போர்களை நிறுத்தியுள்ளதாக அவர் […]