ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறு குளங்கள் பாதிப்பு!
இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறு குளங்கள் சேதமடைந்துள்ளன என்று தெரியவருகின்றது. இலங்கை விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் நிர்வாகத்தின்கீழுள்ள ஆயிரத்து 160 சிறு குளங்களே இவ்வாறு சேதமடைந்துள்ளன. அநுராதபுரம் , வவுனியா மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறு குளங்களே அதிகளவு சேதமடைந்துள்ளன. இவற்றை புனரமைப்பதற்குரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறு குளங்களை இலங்கை விவசாய அபிவிருத்தித் திணைக்களம் பராமரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



