இலங்கை செய்தி

13,781 வீடுகள் முழுமையாக சேதம்!

  • December 17, 2025
  • 0 Comments

டித்வா புயல் தாக்கத்தையடுத்து இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் 13 ஆயிரத்து 781 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. அத்துடன், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் (101,055) பகுதியளவு சேதமடைந்துள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பேரிடரால் 643 பேர் உயிரிழந்துள்ளனர். 183 பேர் காணாமல்போயுள்ளனர் என பட்டியலிடப்பட்டுள்ளது. 22 ஆயிரத்து 96 குடும்பங்கள் தொடர்ந்து 723 இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

இலங்கை செய்தி

வெளிநாட்டு உதவி, விநியோக ஏற்பாடு குறித்து விசேட கூட்டம்!

  • December 16, 2025
  • 0 Comments

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு கிடைக்கப்பெறும் வெளிநாட்டு உதவிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிடைக்க பெற்று வரும் வெளிநாட்டு மனிதாபிமான உதவிகளை ஒருங்கிணைப்பதற்காக வெளிநாட்டு மனிதாபிமான உதவி ஒருங்கிணைப்புக்கான உயர் மட்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு தனது மூன்றாவது கூட்டத்தை அனர்த்த முகாமைத்துவ நிலைய வளாகத்தில் அமைந்துள்ள செயலகத்தில் நேற்று நடத்தியது. இதன்போதே மேற்படி விவகாரம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவே மேற்படி குழுவுக்கு தலைமை […]

இலங்கை செய்தி

26,841 குடும்பங்கள் தொடர்ந்து இடைத்தங்கள் முகாம்களில்!

  • December 11, 2025
  • 0 Comments

டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (11) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 203 பேர் காணாமல்போயுள்ளனர். 5 ஆயிரத்து 350 வீடுகள் முழமையாகவும், 86 ஆயிரத்து 245 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 26 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளன. மண்சரிவு மற்றும் […]

error: Content is protected !!