இலங்கை

முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

  • March 3, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் தந்தை, சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.கே. சங்கக்கார காலமானார். கண்டி பிரதேசத்தில் மிகவும் புகழ்பெற்ற சட்டத்தரணியாக விளங்கிய இவர், சட்டத்துறையிலும் சமூக மட்டத்திலும் மிகுந்த மதிப்பிற்குரிய ஒரு ஆளுமையாகத் திகழ்ந்தார். அவரது உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிச் சடங்குகள் நாளை (04) மாலை 6 மணிக்கு கண்டி, மஹய்யாவ பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.    

உலகம்

ஈரானின் குடியிருப்புகள் மீது ஏவுகணை வீச்சு: 5 பேர் பலி

  • March 3, 2026
  • 0 Comments

ஈரானின் ஹமதான் மாகாணத்தில் உள்ள மக்கள்செறிந்து வாழும் குடியிருப்புகள் மீது அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டுப் படைகள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதுடன், 25 பேர் வரை காயமடைந்துள்ளதாக aljazeera செய்திகள் தெரிவிக்கின்றன. ஹமதான் பகுதியில் உள்ள இரண்டு அவசர சிகிச்சை மையங்கள் இந்தத் தாக்குதலில் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் காயமடைந்தவர்களில் பல மருத்துவத் தொழில்நுட்பவியலாளர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடியிருப்புகள் மற்றும் சிவில் உட்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் […]

இலங்கை உலகம்

மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு மூடல்

  • February 28, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தமது வான்பரப்புகளை மூடியமையினால் பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் பிற வடக்கு நாடுகளுக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் விமானங்கள் சவூதி அரேபிய வான்வெளி வழியாக திருப்பி விடப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதேவேளை, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்திய பதற்றங்கள் அதிகரித்து […]

விளையாட்டு

T20 World Cup தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இலங்கை: அடுத்த போட்டி ஓமானுடன்!

  • February 9, 2026
  • 0 Comments

T20 உலகக்கிண்ண தொடரில் 2ஆவது லீக் ஆட்டத்தில் ஓமான் அணியை இலங்கை எதிர்கொள்கின்றது. எதிர்வரும் 12 ஆம் திகதி கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் Pallekele International Cricket Stadium இலங்கை நேரப்படி முற்பகல் 11 AM மணிக்கு போட்டி ஆரம்பமாகும். T20 உலகக் கோப்பை தொடரின் தனது முதல் லீக் ஆட்டத்தில் இலங்கை வெற்றி வெற்றிபெற்றது. நேற்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து முதலில் களத் தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி, […]

அரசியல் இலங்கை

இனவாதத்துக்கு சமாதி கட்டுமாறு சஜித் வலியுறுத்து

  • November 26, 2025
  • 0 Comments

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மதவாதம மற்றும் இனவாத மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக உடனடியாக தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் , எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த வலியுறுத்தலை மேற்கொண்டுள்ளனர். “ அரசியலமைப்பில் நமது நாடு ஜனநாயக நாடாக பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை நடைமுறையில் யதார்த்தமாக்குவது நம் அனைவரினதும் பொறுப்பாகும். இனங்கள், மதங்களுக்கு இடையில் ஒற்றுமையையையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்த பழமைவாதக் கருத்துக்களுக்கு அப்பால் சென்ற தனித்துவமான பணி எம்முன்னால் […]

error: Content is protected !!