2026 பத்மஸ்ரீ அறிவிப்பு:பல விருதுகளை தட்டி தூக்கிய தமிழ்நாடு – மம்மூட்டிக்கு பத்ம பூஷன்
இந்தியாவின் குடிமை விருதுகளிலேயே நான்காவது உச்ச விருதான பத்ம ஸ்ரீ விருதுகள் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், 2026ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகளில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 05 பேர் இடம்பிடித்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணிய மூர்த்தி நடேசன், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், ஓவியர் நீலகிரி ஆர். கிருஷ்ணனுக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று சிற்பக் கலைஞர் ராஜா ஸ்தபதி, திருவாரூர் மிருதங்க கலைஞர் பக்தவத்சலம் ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. […]




