வடக்கு, கிழக்கில் போராட்டம் முன்னெடுப்பு!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடக்கு, கிழக்கில் இன்று கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களை தாங்கியவாறு, நீதி கோரும் பதாதைகளுடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கைதிகள் விடுதலை, பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் குரல் எழுப்பட்டது. அத்துடன், அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் […]




