கொழும்பில் அநுர அரசுக்கு முதல் அடி: “பட்ஜட் ” தோற்கடிப்பு!
கொழும்பு மாநகரசபையின் 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று (22) நடந்த வாக்கெடுப்பில் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய மேலதிக மூன்று வாக்குகளால் பாதீடு தோற்கடிக்கப்பட்டது. கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் 48 ஆசனங்களை வென்ற தேசிய மக்கள் சக்தி, சுயேச்சைக்குழு மற்றும் சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைந்திருந்தது. எனினும், அந்த ஆதரவு தற்போது இழக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகரசபையில் 117 […]




