இலங்கையில் பாரிய வெளிநாட்டு முதலீடு: அடுத்த மாதம் கொழும்பு வருகிறது சீன குழு!
சீனா சினோபெக் Sinopec நிறுவனத்தின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளது என ஆங்கில இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிர்மாணிக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நோக்கிலேயே அக்குழு கொழும்பு வருகின்றது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த வருடம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இதன்போது அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதற்குரிய புரிந்துணர்வு MOU ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. […]




