அரசியல் இலங்கை செய்தி

வெனிசுலா விவகாரம்: ஐ.நாவிடம் இலங்கை விடுத்துள்ள அவசர கோரிக்கை!

  • January 6, 2026
  • 0 Comments

வெனிசுலா மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு அமைதியான தீர்வை நோக்கிச் செயல்படுவது முக்கியம் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. சபை, பாதுகாப்பு சபை என்பவற்றிடமே இலங்கை இவ்வாறு வலியுறுத்தியுள்ளது. வெனிசுலா விவகாரம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வெனிசுலா நிலைவரம் தொடர்பில் இலங்கை அரசு ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதுடன், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச மோதல்களை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது மற்றும் நாடுகளின் […]

இலங்கை செய்தி

ட்ரம்புக்கு எதிராக போராட்டம்: கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு!

  • January 5, 2026
  • 0 Comments

வெனிசுலா மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையை கண்டித்து கொழும்பில் இன்று (05) மாலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட மக்கள் போராட்ட இயக்கத்தினரால் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இடதுசாரி அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். வெனிசுலா இறையாண்மைமிக்க சுதந்திர நாடெனவும், அதன்மீதான ஆக்கிரமிப்பு மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி கைது போன்ற நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர். போரை உருவாக்கி, எண்ணைவளத்தை கொள்ளையடிக்க முற்படுகின்றனர் எனவும் […]

அரசியல் இலங்கை செய்தி

அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இன்று போராட்டம்!

  • January 5, 2026
  • 0 Comments

வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையைக் கண்டித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இன்று (05) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முன்னிலை சோசலிசக் கட்சியாலேயே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு போராட்டம் நடத்தப்படும் என சமூகவலைத்தள பிரச்சாரமொன்றில் மேற்படி கட்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். வெனிசுலா விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை நிறுத்துமாறும், இலத்தீன் அமெரிக்காவில் பரந்த தலையீடுகளை நிறுத்துமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜே.வி.பியின் இருந்து பிரிந்து சென்ற குழுவினராலேயே முன்னிலை சோசலிசக் கட்சி […]

அரசியல் இலங்கை செய்தி

ட்ரம்புக்கு எதிராக இலங்கையில் போராட்டம்: இடதுசாரி கட்சிகள் அதிரடி!

  • January 5, 2026
  • 0 Comments

“அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக இலங்கையில் போராட்டம் நடத்தப்படும்.” இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார Vasudeva Nanayakkara தெரிவித்தார். வெனிசுலாமீதான ட்ரம்பின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே இடதுசாரி சக்திகளுடன் இணைந்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நோக்கி பேரணியாக செல்லவுள்ளோம் எனவும் அவர் கூறினார். எனினும், திகதி விவரம் தொடர்பான தகவல்களை வாசுதேவ நாணயக்கார வெளியிடவில்லை. “ எண்ணெய் வளம்மீதான பேராசை காரணமாகவே வெனிசுலாமீது ட்ரம்ப் தாக்குதல் நடத்தியுள்ளார். ட்ரம்பின் […]

அரசியல் செய்தி

வெனிசுலாமீதான இராணுவ ஆக்கிரமிப்பை வன்மையாகக் கண்டிக்கிறது ஜே.வி.பி.!

  • January 4, 2026
  • 0 Comments

வெனிசுலாவுக்குள் அமெரிக்கா முன்னெடுத்த இராணுவ நடவடிக்கையை ஜே.வி.பி. (JVP) வன்மையாகக் கண்டித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பிரதான பங்காளிக்கட்சியே ஜே.வி.பியாகும். வெனிசுவேலா விவகாரம் தொடர்பில் அக்கட்சியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, “ சுயாதீனமான, தன்னாதிக்கமுள்ள ஒரு நாடான வெனிசுலாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ ரீதியான ஆக்கிரமிப்பு சார்ந்த இடையீட்டினை நாம் கடுமையாக கண்டிக்கிறோம். உலகின் எந்தவொரு சுதந்திரமான, தன்னாதிக்கமுடைய நாட்டினை போன்றே வெனிசுலாவிலும் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற மற்றும் ஆட்சியாளர்கள் யார் என்பதை தீர்மானிக்கின்ற இறைமைத் தத்துவம் […]

error: Content is protected !!