காட்டுத் தீயால் விக்டோரியாவுக்கு பேரிழப்பு!
ஆஸ்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில் பற்றி எரியும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் போராடிவருகின்றனர். மத்திய விக்டோரியாவில் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் காட்டுத் தீ பரவிவருகின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை இழந்துள்ளனர். வனவிலங்குகளும் உயிரிழந்துவருகின்றன. இந்நிலையில் வெப்ப அலை குறைவடைந்து நாளை நிலைமை சீராகலாம் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். எனினும், எச்சரிக்கை நிலை தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு பணியில் 15 ஆயிரம் வரையிலான தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விக்டோரியா மாநிலத்தில் உடமைகளுக்கும் […]





