ட்ரம்புக்கு எதிராக இலங்கையில் போராட்டம்: இடதுசாரி கட்சிகள் அதிரடி!
“அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக இலங்கையில் போராட்டம் நடத்தப்படும்.” இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார Vasudeva Nanayakkara தெரிவித்தார். வெனிசுலாமீதான ட்ரம்பின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே இடதுசாரி சக்திகளுடன் இணைந்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நோக்கி பேரணியாக செல்லவுள்ளோம் எனவும் அவர் கூறினார். எனினும், திகதி விவரம் தொடர்பான தகவல்களை வாசுதேவ நாணயக்கார வெளியிடவில்லை. “ எண்ணெய் வளம்மீதான பேராசை காரணமாகவே வெனிசுலாமீது ட்ரம்ப் தாக்குதல் நடத்தியுள்ளார். ட்ரம்பின் […]




