அவசரகால சட்டத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்து!
அவசரகால சட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உடனடியாக மீளப்பெற வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு எவரும் எதிர்ப்பை வெளியிடப்போவதில்லை. அதற்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம். நிலைமை இவ்வாறு இருக்கையில் எதற்காக அவசரகால சட்டம் நீடிக்கப்படுகின்றது என்ற […]




