இலங்கையில் 30% நிலப்பரப்பில் மண்சரிவு அபாயம் – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
இலங்கையில் 14 மாவட்டங்கள் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தைக் கொண்டிருப்பதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகச்சந்திப்பிலேயே நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர இதனை தெரிவித்தார். “நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 30% மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 34% மக்கள் வசிக்கின்றனர். அந்த நிலப்பரப்பு சுமார் 20,000 சதுர கிலோமீற்றர் வரை பரந்துள்ளது. ‘டித்வா’ புயலைத் […]




